.jpg)
28.09.2022 கோவை::கோவை அரசு மருத்துவமனையில், உலக காதுகேளாதோர் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.கோவை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறை சார்பில், உலக காதுகேளாதோர் வாரம் கொண்டாடப்படுகிறது.இவ்வாண்டு, 'அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவோம்' என்ற தலைப்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், காதுகேளாமைக்கான காரணங்கள், தீர்வுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பிறகு, 'காக்ளியர் இம்பிளான்ட்' அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், தகுதி யுடைய நபர்களுக்கு காதொலிக்கருவிகள் வழங்கப்பட்டன.நேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை டீன் நிர்மலா கொடியசைத்து துவக்கி வைத்தார்.மருத்துவமனை வளாகத்தில் துவங்கி, அரசு கல்லுாரி வளாகம், கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் சென்று, மீண்டும் மருத்துவமனையில் நிறைவடைந்தது.அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை மருத்துவ பேராசிரியர்கள் அலி சுல்தான், சரவணன் மருத்துவ மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment