27.10.2022 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.28) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதந்தோறும் 4-ஆவது வெள்ளிக்கிழமை சீர்காழி கோட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைதீர் முகாம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி அளவில் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், சீர்காழி கோட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன் பெறலாம். மேலும், இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவச் சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், மார்பளவிலான புகைப்படம் 1, கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment