21.10.2022 கம்பம்--பிறந்த குழந்தைகளின் காது கேட்கும் திறனை அறிய " சவுண்ட் புரூப்" அறை கட்ட அரசு ரூ. 20 லட்சம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கி உள்ளது -
மாவட்டத்தில் 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் பெரியகுளம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கம்பத்தில் மாதம் 230 பிரசவம் நடைபெறுகிறது. கேரளா, இடுக்கி மாவட்டத்தில் இருந்து கணிசமான பெண்கள் இங்கு பிரசவத்திற்காக வருகின்றனர். கம்பம் அரசு மருத்துவமனையின் குழந்தை பிறப்பு சதவீதத்தை வைத்து மத்திய அரசு மகப்பேறு கட்டடம் கட்ட ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் பிறக்கும் குழந்தைகளின் செவித்திறனை அறிய உதவும் "சவுண்ட் புரூப்" அறை அமைக்க அரசு ரூ.20 லட்சத்தை ஒதுக்கி உள்ளது.பிறந்தவுடன் காது கேட்கும் திறனை சோதித்து, குறைபாடு இருந்தால் உடனே சரிசெய்ய இந்த அறை பயன்படும் என்று மருத்துவ அலுவலர் பொன்னரசன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment