25.10.2022 திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அக். 27-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்படும்.
மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.
யுடிஐடி அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல், நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றின் அசல், நகலுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மேலும், உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா இருப்பின் தொகுப்பு வீடு கோருபவர்கள், நூறு நாள் அட்டை கோருபவர்கள், தனியார் துறையில் வேலைவாயப்பு ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment