Tuesday, November 8, 2022

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பயிற்சி மையம்: விண்ணப்பம் வரவேற்பு



05.11.2022  விழுப்புரம், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் செயல்படுத்துவதற்கு தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை 5 வயது வரையுடைய செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை சரிசெய்திடும் வகையில் ஆரம்ப நிலை பயிற்சி மையம் வாயிலாக பயிற்சிகள் வழங்கிடும் திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தினை செயல்படுத்தும் தொண்டு நிறுவனத்திற்கு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியம், சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் ஆகியவைகளுக்கு ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு அளித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்திட விருப்பமுள்ள மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது தொண்டு நிறுவன பதிவுச் சான்றிதழ் மற்றும் நிறுவனத்தின் சிறப்பம்சம் குறித்த தொகுப்புகளுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரில் சமர்பிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment