Friday, November 25, 2022

மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்க உத்தரவு


26.11.2022
மாதாந்திர உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 4,379 ஆகும். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வீதம் உதவித்தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஆண்டுதோறும் ஒரு முறை கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வாழ்நாள் சான்றிதழை பெற்று அதிகாரிகளிடம் சமர்ப்பித்தால் மட்டுமே உதவித்தொகை தொடர்ந்து கிடைக்கப் பெறும்.

இது தொடர்பாக அந்தத் துறை சார்பில் கடந்த சில மாதங்களாக அறிவிப்பு இதுவரை 1,425 பேர் மட்டுமே வாழ்நாள் சான்றிதழை வழங்கி உள்ளனர். மீதமுள்ள 2,954 பேர் இன்னும் வழங்கவில்லை. உதவித்தொகை பெறுவோர் இம்மாத இறுதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெறுவது ரத்தாகி விடும் வாய்ப்பு உள்ளது என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment