Wednesday, November 16, 2022

மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பது குறித்து விழிப்புணா்வு



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத் திறனாளி குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயிலும் வகையில் அவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, நவம்பர் 14-ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் நடைபெற உள்ளன. இதில், உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வுப் பேரணி, இணைவோம் மகிழ்வோம். ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகள், ஒருங்கிணைந்த கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், சிறார் திரைப்படங்கள், சைகை மொழி தமிழ்த் தாய் வாழ்த்து ஆகிய நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற உள்ளன. முதல் நிகழ்ச்சியாக தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 161 பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. குமாரசாமிப்பேட்டை, திருவள்ளுவர் அறிவகம் அரசு உதவி பெறும்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரி வட்டார மேற்பார்வையாளர் கவிதா தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

இதில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல், அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல், அவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு உறுதிமொழியேற்கப்பட்டது.


No comments:

Post a Comment