Saturday, November 26, 2022

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.64 கோடி முறை பயணம்



25.11.2022   கோவை மாவட்டத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை 11.64 கோடி முறை பயன்படுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பெண்களின்பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடக்கிவைத்தார். ஆரம்பத்தில் பெண்களுக்கு மட்டுமே இருந்த கட்டணமில்லா சேவை நாளடைவில் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத்திறளனாளிகளின் உதவியாளர்கள், திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2021 ஜூலை முதல் 2022 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெண்கள் 11.57 கோடி முறையும், மாற்றுத் திறனாளிகள் 5.75 லட்சம் முறையும், மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்கள் 32 ஆயிரம் முறையும், திருநங்கைகள் 66 ஆயிரம் முறையும் சேர்த்து மொத்தமாக 11.64 கோடி முறை கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 25, 2022

மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு பயிற்சியுடன் தொழிற்திறன் பயிற்சி- முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்



25.11.2022    சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகள் மூலம் தொழிற்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில்பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்டபகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான், அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற வரையறையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

அரசின் நலத்திட்டப் பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். குறிப்பாக, விளிம்பு நிலையில்உள்ள மக்களுக்கு உறுதியாகக் கிடைக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

அரசின் கவனம் மிகுதியாகத் தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத் திறனாளிகள். தமிழக அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், சென்னை மாவட்டத்தில் ரூ.1.51 கோடியில் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

சாலையோரங்களில் தள்ளுவண்டிக் கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கவும், திருமண நிதியுதவியை முழுமையாக ரொக்கமாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுடன் ரூ.1,763 கோடியில் தொடங்கப்பட உள்ளது. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு திறன்மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகளின் மூலம் தொழிற்திறன் பயிற்சியும் அளிக்கப்படும்.

‘சமூகப் பதிவு அமைப்பு’ மூலம்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல்மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும். ஒரு மாற்றுத்திறனாளிகூட மன வருத்தம் அடையக்கூடாது. கருணை உள்ளத்தோடு மாற்றுத் திறனாளிகள் நலம் காக்க பாடுபடுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், எம்எல்ஏக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சு.ரவி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலர் ஆனந்தகுமார், ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்க உத்தரவு


26.11.2022
மாதாந்திர உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 4,379 ஆகும். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வீதம் உதவித்தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஆண்டுதோறும் ஒரு முறை கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வாழ்நாள் சான்றிதழை பெற்று அதிகாரிகளிடம் சமர்ப்பித்தால் மட்டுமே உதவித்தொகை தொடர்ந்து கிடைக்கப் பெறும்.

இது தொடர்பாக அந்தத் துறை சார்பில் கடந்த சில மாதங்களாக அறிவிப்பு இதுவரை 1,425 பேர் மட்டுமே வாழ்நாள் சான்றிதழை வழங்கி உள்ளனர். மீதமுள்ள 2,954 பேர் இன்னும் வழங்கவில்லை. உதவித்தொகை பெறுவோர் இம்மாத இறுதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெறுவது ரத்தாகி விடும் வாய்ப்பு உள்ளது என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்க வல்லுநர் குழு..அதிரடி திட்டங்களை அறிவித்த முதல்வர்


25.11.2022
சென்னை: ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்து விடக்கூடாது. ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் என்றாலும் அந்தச் செயலை நாம் செய்தாக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடும், தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய வல்லுநர் குழு அமைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது! ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. 

 அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற வரையறையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள். அரசின் பயனானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதன்படிதான் திட்டமிடுகிறோம்! செயல்படுத்துகிறோம்! என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

மாற்றுத்திறனாளிகள் 
அரசின் கவனம் மிகுதியாகத் தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைக் காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையினை உறுதி செய்யவும் 2011-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது. 

சிறப்பு கவனம் 
மாற்றுத்திறனாளிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நினைத்தார்கள். அத்தகைய கவனத்தோடு இத்துறையை நானும் எனது தனி கவனிப்பில் வைத்திருக்கிறேன். நமது அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து உயர்த்தப்பட்டு, தற்போது ரூபாய் இரண்டாயிம் வழங்கப்படுகிறது. இதனால், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். 

தொழில் தொடங்க உதவி 
மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற உலகச் சிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தொழில் தொடங்க உதவி செய்ய, குறைந்தபட்சக் கல்வி தகுதியினை எட்டாம் வகுப்புத் தேர்ச்சியாக குறைத்தும், வயது உச்ச வரம்பை 45-லிருந்து 55 ஆக உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமின்றி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக உத்தரவிடப்பட்டுள்ளது. 

சிறப்பு நிதி ஒதுக்கீடு 
உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வேண்டி காத்திருப்போர் அனைவருக்கும் நிலுவையின்றி சிறப்புநிதி ஒதுக்கீடு செய்தும் நமது அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. வீடு வழங்கும் திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 விழுக்காடு வீடுகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதேபோல் வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

மதிப்பூதியம் உயர்வு 
சிறப்புப்பள்ளிகள் மற்றும் ஆரம்பநிலைப் பயிற்சி மையங்களில் பணியாற்றும் ஆயிரத்து 294 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூபாய் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் ஒரு அலுவலகம் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது. 

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் 
சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதற்காகத் தள்ளுவண்டி கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமண நிதியுதவியானது இனிமேல் முழுமையாக ரொக்கமாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. 

வேலை வாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு 
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முக்கிய நிகழ்வுகளின் போது செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்துதர ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாகவும் பிறரைச் சார்ந்து இல்லாமலும் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவேதான், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடும், தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய வல்லுநர் குழு அமைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வேலை வாய்ப்பு முகாம்கள் 
மாவட்ட அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்குப் பொது இடங்களில் தடையற்ற சூழலை அமைக்கும் நடவடிக்கையாக, சாய்தளப் பாதை, மின்தூக்கி பொருத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை, பார்வையற்றோர் பயன்பாட்டிற்காக தரைத் தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன. செவித்திறன் குறைபாடு உடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்ய தகவல் பலகைகள், சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் போன்ற வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சுய வேலை வாய்ப்பு பயிற்சி 
18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடைய" (Standard Operating Procedure (SOP) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலகவங்கி நிதியுடன் ஆயிரத்து 763 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும்.

 கருணை உள்ளம்
 "சமூகப் பதிவு அமைப்பு" (Social Registry) மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும். இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்தக் காத்திருக்கிறது. ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்து விடக்கூடாது. ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் என்றாலும் அந்தச் செயலை நாம் செய்தாக வேண்டும். இத்தகைய கருணை உள்ளத்தோடு இவர்களது நலம் காக்க பாடுபட நாம் என்றைக்கும் துணையாக நிற்போம் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


மாற்றுத்திறனாளிகள் துறையை எனது தனி கவனத்தில் வைத்துள்ளேன்.. கவலைப்படாதீங்க.. முதல்வர் மு.க.ஸ்டாலின்.!




25.11.2022   நமது அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து உயர்த்தப்பட்டு, தற்போது ரூபாய் இரண்டாயிம் வழங்கப்படுகிறது. இதனால், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகள் கூட மனவருத்தம் அடைந்து விடக் கூடாது. ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் திட்டம் என்றாலும் அதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகையில்;- ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது! ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது! அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற வரையறையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள்.




அரசின் பயனானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதன்படிதான் திட்டமிடுகிறோம்! செயல்படுத்துகிறோம்! அரசின் கவனம் மிகுதியாகத் தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைக் காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையினை உறுதி செய்யவும் 2011-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நினைத்தார்கள். அத்தகைய கவனத்தோடு இத்துறையை நானும் எனது தனி கவனிப்பில் வைத்திருக்கிறேன்.

நமது அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து உயர்த்தப்பட்டு, தற்போது ரூபாய் இரண்டாயிம் வழங்கப்படுகிறது. இதனால், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

* மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற உலகச் சிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தொழில் தொடங்க உதவி செய்ய, குறைந்தபட்சக் கல்வி தகுதியினை எட்டாம் வகுப்புத் தேர்ச்சியாக குறைத்தும், வயது உச்ச வரம்பை 45-லிருந்து 55 ஆக உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமின்றி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக உத்தரவிடப்பட்டுள்ளது.

* உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வேண்டி காத்திருப்போர் அனைவருக்கும் நிலுவையின்றி சிறப்புநிதி ஒதுக்கீடு செய்தும் நமது அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

* வீடு வழங்கும் திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 விழுக்காடு வீடுகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

* இதேபோல் வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

* சிறப்புப்பள்ளிகள் மற்றும் ஆரம்பநிலைப் பயிற்சி மையங்களில் பணியாற்றும் ஆயிரத்து 294 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூபாய் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

* சென்னை மாவட்டத்தில் ஒரு அலுவலகம் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது.

* சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதற்காகத் தள்ளுவண்டி கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

* திருமண நிதியுதவியானது இனிமேல் முழுமையாக ரொக்கமாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

* அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முக்கிய நிகழ்வுகளின் போது செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்துதர ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாகவும் பிறரைச் சார்ந்து இல்லாமலும் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவேதான், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடும், தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய வல்லுநர் குழு அமைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்குப் பொது இடங்களில் தடையற்ற சூழலை அமைக்கும் நடவடிக்கையாக, சாய்தளப் பாதை, மின்தூக்கி பொருத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை, பார்வையற்றோர் பயன்பாட்டிற்காக தரைத் தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன. செவித்திறன் குறைபாடு உடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்ய தகவல் பலகைகள், சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் போன்ற வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடைய” (Standard Operating Procedure (SOP) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலகவங்கி நிதியுடன் ஆயிரத்து 763 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Wednesday, November 23, 2022

வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீதமாக உயர்த்தி வழங்க தீர்மானம்


22.11.2022   புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் சார்பில் உலக காதுகேளாதோர் தினவிழா தனியார் திருமண மகாலில் நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். வரவேற்புரையை காதுகேளாதோர் சங்க சேர்மன் ஜெயகுமார் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக ஒலி, ஒளி அமைப்பாளர் சங்க தலைவரும், தி.மு.க. நகரச்செயலாளருமான செந்தில் கலந்துக் கொண்டு பேசினார். 

விழாவில் பள்ளிகள், கல்லூரிகளில் சைகைமொழி தெரிந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு அலுவலங்களில் சைகைமொழி பெயர்ப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

 அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7சதவீதமாக உயர்த்தி தரவேண்டும், ரூ.3000 முதல் 5000 வரை உதவி தொகை உயர்வு வேண்டும், சிறப்பு வீடுகள், மனைகள் இலவசமாக வழங்க வேண்டும், ஓட்டுனர் உரிம அட்டை வழங்கப்பட வேண்டும், கபடி போட்டியில் எஸ்டிஏடீ கபடி காதுகேளாதோர் அனுமதியை ஏற்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

விழாவில் காது கேளாதோர் சங்க துணை சேர்மன் செல்வராஜ், திரைப்பட நடிகரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான சாத்தையா, அரசு வழக்கறிஞர் சிவா, முத்துரையான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் தீத்தப்பன், சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபு, சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டுக் கழகம்தலைவர் பாலாஜி, மாவட்ட தலைவர் சிவக்குமார். முகமது தாகீர் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.




திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பட்டா முன்னுரிமை



22.11.2022   திருப்பூர்:இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

முப்படை வீரர்களின் குடும்பத்தினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஏழைகள், நிலமற்ற ஏழைகள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் சொந்த வீடு கட்டி, மற்றவர்களுக்கு இணையாக வாழும் வகையில் வசதிகள் செய்யப்படுகிறது.

வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் சேர்க்கப்பட வேண்டுமென கடந்த வாரம் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டுமனை பட்டா வழங்கும் போது முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்' என்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கைப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்


20.11.2022 மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச கைப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டயப் படிப்பு, இளநிலை கல்வி பயிலும், சுயதொழில் புரியும், தனியார்துறையில் பணிபுரியும் 80 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட 18- 60 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கைப்பேசி வழங்கப்பட உள்ளது.

தகுதியுடையோர் தங்களது தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச் சான்று, சுயதொழில் புரிபவராயின் சுயத்தொழில் பதிவுக்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நவ.25 காலை 10.30- க்கு நடைபெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மாநிலக் கல்விக் கொள்கையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடம்: சைகை மொழி இணைப்பு மொழி ஆக்கப்படுமா ?



21.11.2022    மனிதன் கண்டுபிடித்தவற்றிலேயே உன்னதமானதாக அறியப்படுவது மொழியாகும். நாம் கண்டுபிடித்துப் பயன்படுத்திவரும் மொழிகளே மனிதகுலத்தை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தியும் உயர்த்தியும் விளங்கச் செய்கின்றன. தொடக்க காலங்களில் உடலசைவுகள், ஒலிகள் மற்றும் குறியீடுகள் மூலமாகவே மனிதர்கள் அவர்களுக்குள் தொடர்புகொண்டார்கள். படிப்படியாக வளர்ச்சி பெற்ற மொழிகளால் நாம் இன்று அனைத்தையும்நயம்பட அழகாக வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு எண்ணிலடங்கா நன்மைகளை அளிக்கும் மொழிகளே நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கருவியாகவும் உள்ளது வியப்பாக உள்ளது.

சைகை மொழி: பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் “சைகைமொழி”யும் உலகில் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. மற்ற மொழிகளைப் போலவே இதிலும் பல்வேறுவடிவங்களும் வகைகளும் உள்ளன.அவற்றுள் பன்னாட்டு சைகை மொழி,அமெரிக்க சைகை மொழி, தென்னாப்பிரிக்க சைகை மொழி, இந்திய சைகை மொழி உள்ளிட்ட இன்ன பிற நாட்டு சைகை மொழிகளும் அடங்கும்.

தேவைக்கேற்ப எந்த மொழிக்கும் சைகை மொழியை உருவாக்க முடியும். சைகை மொழி பயன்படுத்துவதால் மூளை செயல்பாடுகள் மேம்படவும் வாய்ப்புள்ளது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றைஉணர்ந்த தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சைகைமொழி பள்ளிக் கலைத் திட்டத்தில் அனைவருக்குமான ஒரு பாடமாகவேஇணைத்துக் கற்பிக்கப்படுகிறது.

உலக மக்கள்தொகையில் 20% மக்களுக்கு லேசான செவித்திறன் குறைபாடும், கிட்டத்தட்ட 5% மக்களுக்கு சற்று தீவிர செவித்திறன் குறைபாடும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகமக்கள் தொகையில் 18 சதவீதமும் 140 கோடி மக்கள் தொகை கொண்டஇந்தியாவில் 2.21% அதாவது மூன்றுகோடி மக்களும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களுள் பேச்சுமற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் 26% உள்ளனர், அதில் 29% பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள்.

உண்மையான உள்ளடக்கிய கல்வி: இவர்களில் பெரும்பாலோனோர் தற்போது பள்ளி/சிறப்புப் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.இவர்களுக்கு பெரும்பாலும் ஒற்றை மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது. தங்களுக்குள் எளிமையாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ளகூடுதலாக இவர்கள் சைகை மொழியையும் கற்றுக்கொள்கிறார்கள். இதுபோல, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உலகளாவிய பிரெய்ல் மொழியும் உள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் 2009, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம்2016, உள்ளடக்கிய கல்வித் திட்டம் போன்ற முன்னெடுப்புகளால் மாற்றுத்திறனாளிகளின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிரியர்கள், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள், சக மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. உள்ளடக்கியக் கல்வியின் முக்கியநோக்கமே மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் பங்களிக்கக்கூடிய ஓர் அங்கமாக மாற்றுவதே ஆகும்.

நாம் அனைவருமே பல்வேறு சூழல்களில் தகவல் தொடர்பை எளிமையாக்க மற்றும் ஒலி மாசைக் குறைக்க உடல் மொழி மற்றும் சைகைகளைப் பயன்படுத்துவது நிதர்சனம். ஆகவே, இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கும் வண்ணம் நாம் சைகை மொழியை ‘இணைப்பு மொழி’யாக்கி பயன் பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரக வளாகத்தில் ”சாத்தியங்களின் அருங்காட்சியகம்” (Museum of Possibilities) அமைத்து நாட்டிற்கே உதாரணமாக விளங்கும் தமிழகம் இதையும் முயன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்தவும், உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும் இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டும். உள்ளடக்குதல் பிறருக்காக செய்யப்படும் முயற்சியாக இல்லாமல் பிறருடன் இணைந்து செய்யப்பட்டால் மட்டுமே அதன் இலக்கை அடைய முடியும்.






Tuesday, November 22, 2022

சிவகங்கையில் வருகிற 30-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்



23.11.2022   சிவகங்கை சிவகங்கையில் வருகிற 30-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 குறைதீர்க்கும் கூட்டம் 
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட அளவில் வருகிற 30-ந் தேதி காலை 10 மணியளவில் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைவழங்குதல், யு.டி.ஐ.டி. பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு, பிறதுறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள், வங்கி கடனுதவி, வேலைவாய்ப்பு பயிற்சி, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். 

பயனடையலாம் 
மேற்குறிப்பிட்ட உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



நாளை அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு



23.11.2022   அரியலூர் மாவட்டம். உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில், உடையார்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை வட்டங்களுக்குள்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


Thursday, November 17, 2022

மாற்றுத்திறனாளிகள் கணினி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்



  • 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும். 
  • கணினி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது. 

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணிணி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

கணிணிப் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும். 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது. 

பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்.

 மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகில் ஈஸ்வர் நகர், 4 பக்கிரிசாமி தெருவில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் வந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்கள் பெற 04362-242377 என்ற தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணிணி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெ றலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'வேலை வேணும்'.. தமிழகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 67 லட்சம் பேர்.. வயது வாரியாக விவரம் சொன்ன அரசு!



17.11.2022
அக்டோபர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18,48,279 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 28,09,415 பேரும் பதிவு செய்து உள்ளனர்.

மேலும் 31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18,30,076 பேர் உள்ளனர் என்றும் 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2,30,310 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,602 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 73,366 பேரும், பெண்கள் 38,029 உள்பட 1,11,395 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ,100 பேரும், பெண்கள் 5,484 பேர் உள்பட 17,584 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9, 483 பேர், பெண்கள் 4,505 பேர் உள்பட 13,988 பேர் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் 3,41,615 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2, 55,496 நபர்கள் என மொத்தம் 67,23,682 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.




நாகை மாவட்ட காதுகேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா



நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேளாங்கண்ணி குடும்ப சமுதாய கூடத்தில் நடைபெ ற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார். 

வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், தி.மு.க. செயலாளர் மரிய சார்லஸ், தமிழ்நாடு காதுகேளாளர் கூட்டமைப்புதலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செய லாளர் மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

 தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் மகளிர் சங்கம் தலைவர் ரிஸ்கில்லா, பொதுச் செயலாளர் தேவ்தா சிறப்புரையாற்றினர். 

நிகழ்ச்சியினை தமிழ்நாடு கலை பண்பாட்டு காது கேளாதோர் சங்க சைகை மொழி பெயர்ப்பாளர் கேசவன் தொகுத்து வழங்கினார். 

இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காது கேளாதோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் நாகை மாவட்ட காதுகே ளாதோர் முன்னேற்ற சங்க தலைவராகசுகுமாரன், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக வைரமூ ர்த்தி, துணைத் தலைவராக லட்சுமணன், துணைச் செயலாளராக ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள் பதவி யேற்பு செய்து வைத்தனர்.




Wednesday, November 16, 2022

மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பது குறித்து விழிப்புணா்வு



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத் திறனாளி குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயிலும் வகையில் அவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, நவம்பர் 14-ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் நடைபெற உள்ளன. இதில், உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வுப் பேரணி, இணைவோம் மகிழ்வோம். ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகள், ஒருங்கிணைந்த கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், சிறார் திரைப்படங்கள், சைகை மொழி தமிழ்த் தாய் வாழ்த்து ஆகிய நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற உள்ளன. முதல் நிகழ்ச்சியாக தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 161 பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. குமாரசாமிப்பேட்டை, திருவள்ளுவர் அறிவகம் அரசு உதவி பெறும்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரி வட்டார மேற்பார்வையாளர் கவிதா தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

இதில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல், அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல், அவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு உறுதிமொழியேற்கப்பட்டது.


வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பட்டா: முன்னுரிமை பட்டியலில் சேர்த்து அரசாணை

16.11.2022 சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய்த்துறை மூலம் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு வருவாய்த்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்.21ம் தேதி சட்டப்பேரவையில், "வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைக்க ஏதுவாக வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஏற்கெனவே,1996-ம் ஆண்டு வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில், மாற்றுத் திறனாளிகளை சேர்க்கவும், அடிப்படை தகுதிகளாக நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என பூர்த்தி செய்யும் பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில், முப்படைகள், துணை ராணுவப் படைகளில் பணியில் இருந்தபோது போரில் உயிரிழந்தவர்கள், செயலிழந்தவர்கள் குடும்பத்தினர், 1976-ம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்பு சட்டப்படி விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் நிலமற்ற ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற மற்றும் கைம்பெண்கள், முன்னாள் ராணுவப் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளில் புணியாற்றியவர்கள், இதர அடிப்படை தகுதிகளை பெற்ற பயனாளிகள் ஆகியோருக்கு பட்டா வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர்க்கும் முகாம்


16.11.2022 கரூர் 
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 157 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு பணிகள் குறித்தும், அவர்களுக்கு பணித்தளங்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு இரு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட அளவில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்குதல், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மாநிலம் முழுவதும் 1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் சேர்ப்பு-அதிகாரி தகவல்


13.11.2022 புதுக்கோட்டை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்கள் மற்றும் உடல் இயக்க நிபுணர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கமணி கலந்து கொண்டு பேசுகையில், ''மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனிநபர் கல்வி திட்டம் மூலம் அவரவர் நிலைக்கேற்ற இலக்கை வடிவமைத்து அவர்களுக்கு சிறப்பு கல்வி அளித்தும், அவர்களின் முன்னேற்றத்தினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன் கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது'' என்றார். கூட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்கள் மற்றும் உடல் இயக்க நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோசலை, புள்ளியியல் அலுவலர் உஷா ஆகியோர் செய்திருந்தனர்.



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, பண்பாடு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


15.11.2022 சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் குழந்தைகள் தினமானநவம்பர் 14 முதல் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை, பண்பாடுநிகழ்ச்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளி குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை நிறைவேற்றி வருகிறது. அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் “உள்ளடக்கிய கல்வியையும்” வழங்கி வருகிறது. எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக்கூடாது என்பதை உறுதிசெய்யும் விதமாக மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பானவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 3-ம் தேதி “உலக மாற்றுத்திறனாளிகள் தினம்” கொண்டாடப்படும் நிலையில், நவம்பர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதிவரை உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வு பேரணி, இணைவோம் மகிழ்வோம், கலை நிகழ்வு (காகித பறவை), கலை நிகழ்வு (நடனம்), விளையாட்டுப் போட்டிகள், சிறார் திரைப்படம் திரையிடுதல், சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்த மாபெரும்தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்தி அவற்றை முறையாக ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்


16.11.2022
பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களிலும் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோர், மனவளர்ச்சி குன்றியோர், உடல் இயக்க குறைபாடுடையோர் மற்றும் பல்வேறு குறைபாடுகளை உடையோர்களுக்கான அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், யூ.டி.ஐ.டி. அட்டை பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கென பிரத்யேகமாக சிறப்பு மருத்துவமுகாம் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கி நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், முடநீக்கியல் வல்லுனர் ஜெயராமன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் இன்றும் (புதன்கிழமை), மலையாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளையும் (வியாழக்கிழமை), பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வருகிற 18-ந் தேதியும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-ந் தேதியும், பாண்டகப்பாடி மானிய தொடக்கப்பள்ளியில் 23-ந்தேதியும், அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24-ந் தேதியும், கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ந்தேதியும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29-ந்தேதியும், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-ந்தேதியும் நடக்கிறது. மேலும் டிசம்பர் மாதத்திலும் சிறப்பு மருத்துவமுகாம்கள் தொடர்ந்து நடக்கிறது. குறிப்பிட்ட நாட்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களது போட்டோ-6 மற்றும் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தங்கள் அருகாமையில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.


தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசின் உயர் மட்ட குழு முடிவு


16.11.2022  சென்னை: தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது தொடர்பாக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த உயர் மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களை கண்டறிவது குறித்த முதல் உயர் மட்ட குழுக் கூட்டம் இன்று (நவ.16) தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்ட ம் 2016-ன்படி சம உரிமை, சம வாய்ப்பு கொள்கையினை அமல்படுத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு சாரா உறுப்பினர்கள் இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திட உகந்த பணியிடங்களை கண்டறிந்து, உரிய பயிற்சிகளை அளித்து, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கிடலாம் என்றும், நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த தடைகளற்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தேவையான உதவி உபகரணங்களை வழங்கி, மாற்றுத்திறனாளிகளின் திறனைக் கண்டறிந்து, ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், தனியார் நிறுவனங்களுடன் தொடர் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் ஆலோசணை வழங்கினார்.



Tuesday, November 8, 2022

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பயிற்சி மையம்: விண்ணப்பம் வரவேற்பு



05.11.2022  விழுப்புரம், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் செயல்படுத்துவதற்கு தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை 5 வயது வரையுடைய செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை சரிசெய்திடும் வகையில் ஆரம்ப நிலை பயிற்சி மையம் வாயிலாக பயிற்சிகள் வழங்கிடும் திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தினை செயல்படுத்தும் தொண்டு நிறுவனத்திற்கு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியம், சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் ஆகியவைகளுக்கு ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு அளித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்திட விருப்பமுள்ள மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது தொண்டு நிறுவன பதிவுச் சான்றிதழ் மற்றும் நிறுவனத்தின் சிறப்பம்சம் குறித்த தொகுப்புகளுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரில் சமர்பிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.