கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் ஷ்ரவன்குமார்செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காவியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முகாமில் 10ம் வகுப்பு பிளஸ் 2 ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் அரசின் கடனுதவி பெறுவது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறப்பில் கூறப்பட்டுள்ளது.
Sir please update recent news your blog are more useful. Thank you sir
ReplyDelete